skip to main | skip to sidebar
  • Home
  • குறிப்புகள்
  • கண்டதும், கேட்டதும்
  • கவிதைகள்
  • நூல் அறிமுகம்
  • படிவம்
  • முகவரிகள்
  • ஹைக்கூ
  • சிறுகதைகள்
  • பொது
வதிலைபிரபா


செய்திகள்

Loading...





ஹைக்கூ

நீண்ட நேரமாக
பறக்கும் பறவையொன்று
பறந்துகொண்டிருக்கிறது.

உலர்ந்த மணலில்
உறைந்து கிடந்தவிதை மீது
விழுந்தது மழைத்துளி.

மஞ்சள் வெயிலில் மயங்கி
கிடந்த சாரை பாம்பொன்று
ஊர்ந்து செல்கிறது.

உதிரும் சருகில்
தொங்கிக் கொண்டிருக்கிறது
சிலந்தி பூச்சி.

தகிக்கும் தார்சாலையில்
பதியாத சுவடுகள்
இழுவை மாடு.

புற்களை வெட்டாதீர்கள்
உறங்கிகொண்டிருக்கிறது
பனி துளிகள்.

பூக்கள் மலர்கின்றன
வண்ணத்துப் பூச்சிகளை
பிடிக்காதீர்கள்.

கொசு கடித்தபோது
அயர்ந்து உறங்குகிறான்
பிச்சைக்காரன்.

இரவுநேர மழை
வடியும் நீரிடுக்குகளிடையே
கத்துகிற தவளைகள்.

தீட்டப்பட்ட ஓவியம்
உயர்த்து எழுகிறது
பார்வை விழிகள்.

இரவின் மௌனம்
பகலின் இரைச்சல்
உத்திரக் காத்திருக்கும் மலர்.

பூக்களின் தரிசனம்
கண்டு ரசித்தேன்
மலரும் பொக்கைவாய்.

அமாவாசை இரவில்
தொலைந்த நிலா
புழக்கடையில் அக்கா.

ஆழில் பேரலை
அள்ளிச் சென்றது
சாதி முட்களை.

விழிகளால் பேசி
இதழ்களால் எழுதினான்
ஈர முத்தம்.

முகிழ் விழுது
மழி விழுது
ஆடி பழகு.

வெல்ல அபாயம்
காலியான ஊர்
கதறும் தவளைகள்.

பற்றி எரிகிறது
புதர் காடெங்கும்
மோக தீ.

மௌன இரவின்
நிசப்த ஒலிகள்
நீயும் நானும்.

வடியும் இரவின்
கடைசி துளிகள்
வியர்வை பனிக்குடம்.

பழைய செருப்பை
உதறி நடந்தான்
கடிக்கும் புது செருப்பு.

காற்றிலாடும்
ஒற்றை இறகு
வானம் வசப்படுமா?

பூக்களோடு
என்ன உரையாடல்?
ரீங்காரமிடும் வண்டுகள்.

கிளையில்லா மரம்
கண்களை உறுத்துகிறது
கூடில்லா பறவை.

ருசியில்லை
தூர எரிந்தபோது
பசித்தது வயிறு.

மதுரசத்தில் திளைத்தபோது
இறந்து கிடந்தவன் மீது
மொய்க்கும் வண்டுகள்.

முதல்தட்டில் பொருண்மை
கடைத்தட்டில் பொறுமை
இடைத்தட்டில் வெறுமை.
Posted by Unknown
Email This BlogThis! Share to X Share to Facebook

0 comments:

Post a Comment

Newer Post Home
Subscribe to: Post Comments (Atom)
உங்கள் வலைப்பதிவில் vathilaipraba.blogspot.com இணைய இதழுக்கு இணைப்பு செய்திட கீழ்காணும் Script -ஐ Copy செய்து உங்கள் வலைப்பதிவுக்கான Script - ல் தேவையான இடத்தில் Paste செய்தால் போதும்....
<a href="http://www.vathilaipraba.blogspot.com" title="Create animated gif"><img src="http://www.loogix.com/img/res/1/3/0/7/2/4/13072420601084675.gif" alt="Create animated gif"/></a><br/><a href="http://www.vathilaipraba.blogspot.com/"></a>

எமது வலை தளத்தில் இணைப்பு செய்துவரும் வலைப் பதிவர்களுக்கு நன்றி..

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Vathilai Praba

  • தமிழ்முரசு Tamil Murasu
  • யவ்வனம்
  • SARVADESA TAMILER CENTER
  • காற்றுவெளி இதழ்
  • தி.க.சி
  • ஓவியா பதிப்பகம்
  • நெய்தல்
  • Muthukamalam.com
  • திரட்டி.காம் பதிவுகள்
  • தமிழ்ப் புத்தகம்
வதிலைபிரபா

உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க 6 -ஆவது மாநாடு - இலங்கை

இலங்கை சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு

Unknown
View my complete profile

Search Box



Highlight 3 'மகாகவி' இதழ்களை முழுமையாக வாசிக்க படத்தின் மீது 'click' செய்யுங்கள்.

Blogger Tips and Tricks
Highlight 2

Posts
Atom
Posts
Comments
Atom
Comments
Literature Blogs
Powered by Blogger.

Recent Comments

© வதிலைபிரபா - Designed by Theme.fm, Google blogs templates by Blog and Web.