செய்திகள்






பிரித்தானிய, ஈழத்து எழுத்தாளர் கவிஞர். முல்லை அமுதன் பிரித்தானியாவில் ஈழத்து நூல்களின் கண்காட்சிகளை நடாத்துவதில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார்.

கவிஞர். முல்லை அமுதன்அவர்களின் இயற்பெயர் இரத்தினசபாபதி. மகேந்திரன். இலங்கை, யாழ்ப்பாணம், கல்வியங்காடு இவரது பிறப்பிடம்..புலம் பெயர்ந்து பிரித்தானியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் முல்லை அமுதன் பிரித்தானிய, ஈழத்து எழுத்தாளர் ஆவார். பிரித்தானியாவில் ஈழத்து நூல்களின் கண்காட்சிகளை நடாத்துவதில் முழுக்கவனம் செலுத்தி வரும் இவர் 'காற்றுவெளி' என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.'காற்றுவெளி' அச்சு இதழாக வந்து, தற்போது இணைய இதழாக வெளிவருகிறது. முல்லை அமுதன் 1980 களில் எழுதத் தொடங்கினார். 1981இல் இவரது முதல் நூலான 'நித்திய கல்யாணி' கவிதை நூல் வெளியானது. இது வரை 12 நூல்கள் வெளியிட்டுள்ளார். ஈழத்து நூல்களை சேகரிப்பதுடன், தொடர்ச்சியாக நூல்கண்காட்சிகளை நடாத்தி, அவற்றை ஆவணப்படுத்தி வரும் இவரால் 10,000 க்கும் அதிகமான நூல்கள், சஞ்சிகைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் மறைந்த எழுத்தாளர்களின் புகைப்படங்களையும், நினைவுமலர்களையும் சேகரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இவரது நூல் கண்காட்சி பற்றி 'பதிவுகள்' இணைய தளத்தில்..

லண்டனில் ஈழத்துத் தமிழ் நூல்களின் கண்காட்சியை மிகுந்த அக்கறையுடனும், பேருழைப்புடனும் நிகழ்த்திவரும் முல்லை அமுதனுக்கு லண்டன் வாழ் தமிழர்கள் நன்றிக்கடன்பட்டிருக்கிறார்கள். இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் ஈழத்தமிழர்கள்; வெளியிட்ட பன்னிரண்டாயிரத்துக்கும்; மேற்பட்ட நூல்களை புலம்பெயர்ந்துவாழும் நாடுகளிலிருந்தும், இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் இருந்தும் முல்லை அமுதன் அரும்பாடுபட்டுத் தேடித் திரட்டி நவம்பர் மாதம் பத்தாம் திகதி ‘இல்போர்ட்’ சென்.லூக்ஸ் தேவாலய மண்டபத்தில் கண்காட்சிக்கு வைத்திருந்தார். பல்வேறு தலைப்புக்களின் கீழ் நூல்கள் பகுதி பகுதியாக பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இலங்கையிலேயே இவ்வளவு பெருந்தொகை நூல்களை ஒரே கண்காட்சியில் பார்க்க முடியுமா? என்பது சந்தேகமே!
லண்டன் போன்ற தலைநகரில் இத்தகைய ஒரு பிரமிப்பூட்டும் ஈழத்து நூல்களின் கண்காட்சி இடம்பெறுவது எமக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும்;. அறிவியல், சமயம், வரலாறு, சிறுகதை, கவிதை, நாவல், சமையல், சிறுவர் இலக்கியம்,
விமர்சனம், கட்டுரைகள் ஆகிய பல்வேறு தலைப்புக்களின் கீழ் இலங்கையில் வெளியாகியுள்ள பெருவாரியான நூல்களை பார்க்கும்போது மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் பரவி இருந்ததை உணரமுடிந்தது.

இவ்வளவு பெருந்தொகையான நூல்களை இலங்கையில் இருந்து எழுத்தாளர்களிடமிருந்தும், பதிப்பாளர்களிடமிருந்தம் லண்டனுக்குத் தருவிக்க முல்லை அமுதன் பெரும் கஷ்டங்களை அனுபவித்திருப்பார் என்பதை வலியுறுத்திச் சொல்ல வேண்டியதில்லை. இதனைவிட சைமன் காசிச் செட்டியில் இருந்து டானியல் அன்ரனிவரை மிக அரிதாகவே கிடைக்கக்கூடிய ஈழத்து அறிஞர்கள், எழுத்தாளர்களின் புகைப்படங்களையும் கண்காட்சிக்கு வைத்திருந்தமை இந்த கண்காட்சிக்கு புதிய மெருகு சேர்த்தது எனலாம். காற்று வெளி சஞ்சிகையின் ஆதரவில் இடம்பெற்ற இந்தக் கண்காட்சி முடிவில் நடன நிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. 
வெளிவந்த நூல்கள்
நித்திய கல்யாணி (1981)
புதிய அடிமைகள் (1983)
விடியத்துடிக்கும் ராத்திரிகள் (1984)
யுத்தகாண்டம் (1989)
விழுதுகள் மண்ணைத் தொடும் (1993)
ஆத்மா (1994)
விமோசனம் நாளை (1995)
ஸ்நேகம் (1998)
பட்டங்கள் சுமக்கிறான் (1999)
முடிந்த கதை தொடர்வதில்லை (1999)
யாகம் (2000)
இசைக்குள் அடங்காத பாடல்கள் (2002)
பதிப்பித்த நூல்கள் : இலக்கியப்பூக்கள் (2008)
ஓவியா பதிப்பகம் வெளியீடான 'சுதந்திரன் கவிதைகள்' நூல் வெளிவரக் காரணமானவர்.
- நன்றி. 
தமிழ் விக்கிபீடியா
பதிவுகள்.காம்



இதயாஞ்சலி






         கடந்த ஆண்டு 25-05-2010 அன்று எங்களது தந்தையார் திரு. R. பரமசிவன் B.A.,B.T., (ஆசிரியர்,  ஓய்வு) அவர்களின் மறைவு எங்களை உலுக்கிப் போட்டது. ௦ 
      10 -06-2011 அன்று எங்களது தாயார் திருமதி. P. ராஜம்மாள் அவர்களின் மறைவு மீண்டும் எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.                                           
                                                                                                             - வதிலைபிரபா
உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம், மகாகவி வாசகர் வட்டம், பதியம் திரைப்பட இயக்கம் மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, பெரியகுளம் வட்டம் ஆகியவை இணைந்து நடத்திய கவிதை நூல் வெளியீட்டு விழா 11-10-2009 ஞாயிறு அன்று காலை 10 மணி அளவில் தேனி ஹோட்டல் இன்டர்நேசனல் அரங்கில் நடைபெற்றது..
தேனி நாடார் சரஸ்வதி மகளிர் கல்லூரி செயலாளர் திரு.மு.அமர்நாத் தலைமை தாங்கினார். திரைப்பட இயக்குநர் திரு.ராஜமோகன் முதல் பிரதியை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார். தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் இதயகீதன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். முன்னதாக உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத் தலைவர் - ஓவியா பதிப்பக வெளியீட்டாளர் கவிஞர் வதிலைபிரபா வரவேற்றார். திருப்பூர் பதியம் திரைப்பட இயக்கம் கவிஞர் பாரதிவாசன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பெ.பரமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூல் அறிமுகம் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பினை உதசிச பொதுச்செயலாளர் கவிஞர் சொர்ணபாரதி வழங்கினார். புலவர் ப.தேவகுரு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் கவிஞர் ம.இளம்பரிதி, வட்டாரச் செயலாளர் த.கிருஷ்ணன், மகாகவி பொறுப்பாசிரியர் நகர வங்கி இராதாகிருஷ்ணன், மகாகவி வாசகர் வட்டத் தலைவர் பொன்.அண்ணாத்துரை, எழுத்தாளர் கருணைச்சாமி, தேனி வையைத் தமிழ்ச் சங்கம் நிறுவனர் ச.ந.இளங்குமரன், குறளரசு கழகம் மாவட்டத் தலைவர் ம.சுந்தரமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர் கவிஞர் பெ.விஜயராஜ்காந்தி ஏற்புரை வழங்கினார்..
"குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்' திரைப்படம் குறித்த ரசிகர்களின் நேரடிக் கேள்விகளுக்கு படத்தின் இயக்குநர் இராஜமோகன் விளக்கம் அளித்தார். தொடர்ந்து இயக்கம் குறித்தான அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். முடிவில் மகாகவி இதழ் ஓவியர் கவிஞர் ஜெ.சுதாகர் நன்றி கூறினார்..

2010 பிப்ரவரி 21 அன்று உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க 5 -வது மாநாடு - வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் .தினமணி நாளிதழின் ஆசிரியர் திரு கே.வைத்தியநாதன் 

     மாநாட்டிற்கு முதுபெறும் எழுத்தாளர் தி.க.சி (தி.க.சிவசங்கரன்) அவர்கள், தினமணி நாளிதழின் ஆசிரியர் திரு கே.வைத்தியநாதன் அவர்கள், திரு.தீபநடராசன், திரு. கலாப்பிரியா, திரு.கழனியூரான், திரு. பூ.திருமாறன், இலங்கையைச் சேர்ந்த சிற்றிதழ் ஆசிரியர்களான அந்தனி ஜீவா, த.கோபாலகிருஷ்ணன், சேயன் இப்ராகிம் இன்னும் ஏராளமான சிற்றிதழ்களின் ஆசிரியர்கள், வாசகர்கள் என இலக்கிய கூடல் இனிதே நடந்தேறியது.

உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தின் மாநாடு முடிந்த பின்னர் உற்சாகத்துடன் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன். உடன் உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க தலைவர் வதிலைபிரபா, பொதுச்செயலாளர் சொர்ணபாரதி, பொருளாளர் நந்தவனம் சந்திரசேகரன், மாநாட்டு அமைப்பாளர்கள் சொக்கம்பட்டி ரஹீம், ஜாகிர் உசேன், இலங்கை கிளைச் செயலாளர் அந்தனி ஜீவா, இலங்கை கிளை பொருளாளர் த.கோபாலகிருஷ்ணன், செல்வதரன்.

ஒரு கடிதமடல் கண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்ததோடு மன மகிழ்ச்சியோடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த மாநாட்டின் வெற்றிக்கு வித்திட்ட தினமணி ஆசிரியர் திரு.கே.வைத்தியநாதன் அவர்களுக்கு இந்த மாநாட்டு அமைப்பின் மூலம் நன்றி கூறிக்கொள்கிறோம்.
 தானும் ஒரு சிற்றிதழ் ஆசிரியராக தனது பத்திரிக்கை உறவை ஆரம்பித்த நெகிழ்ச்சியான அந்த காலம் முதல் சிற்றிதழ்களின் பங்களிப்பு வெகுசன பத்திரிக்கையால் தரமுடியாது என்பதை ஒப்புக்கொள்வதாக கூறினார்.
     தினமணி நாளிதழ் ஆசிரியர் கே.வைத்தியநாதன் அவர்கள் பேசும்போது சிற்றிதழ்களின் அயராத இலக்கிய பணியை, அதன் தாக்கத்தின் வீரியத்தையும் பற்றி தெளிவாக உணர்த்தினார். விளம்பரம் சார்ந்து வரக்கூடிய பத்திரிக்கைகள் எந்தக் கொள்கைக்காக முன்னெடுத்துச் செல்லவேண்டுமோ, அதை அடகு வைக்கும் நிர்பந்தமான சூழ்நிலைக்கு தள்ளப்படுவர். தான் ஆரம்பத்தில் சி்ற்றிதழ் ஆசிரியராக இருந்த அந்த சூழ்நிலையை விளக்கினார். அவர்களுக்கு இருக்கும் அந்த எழுத்து துணிச்சல் வெகுசன பத்திரிக்கைகளுக்கு இருக்காது என்பதை ஆணித்தரமாக கூறினார்.
     இலக்கிய உலகில் சிற்றிதழ்களின் வளர்ச்சி மிகவும் அவசியம் மிகத் தரமான படைப்புகளுடன் இன்னும் நிறைய சிற்றிதழ்கள் வரவேண்டும். தொடர்ந்து அவை வரவேண்டும். சிற்றிதழ்களின் மூலம் வளர்ந்தவர்கள் தான் இன்றைய பெரும் எழுத்தாளர் களாக இலக்கிய வானில் உலாவந்து கொண்டிருக்கிறார் கள். இவ்வாறு அவர் கூறினார்.
     உதசிசங்கத்தின் தலைவர் வதிலைபிரபா முன்வைத்த தீர்மானத்தில் ஒன்றான சிற்றிதழ் எழுத்தாளர்களுக்கும் கலைமாமணி விருது கொடுக்க வேண்டும் என்பதை மேற்கோள்காட்டி பேசிய தினமணி ஆசிரியர் நமக்கு இந்த விருதுகள் தேவையில்லை. முகம் தெரியாத வாசகர்கூட்டம் நமக்கு தரும் அங்கீகாரம் நோபல் பரிசுக்கு சமம். வழங்குவது கலைமாமணி விருது அல்ல சிரிப்பு நடிகர்களுக்கும், கவர்ச்சி நடிகர்களுக்கும் மத்தியில் நமது இலக்கியம் சிதறவேண்டாம். என்றார்.

இலங்கையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு-2011


இன்று சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் முன்னின்று நடாத்திய "சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு -2011" கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் கோலாகலமாக ஆரம்பமாயிற்று. இம்மாநாட்டுக்காக இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், ஃபிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மன், அவுஸ்திரேலியா முதலான பல நாடுகளில் இருந்து எழுத்தாளர்கள், கல்விமான்கள் கொழும்புக்கு வருகை தந்திருந்தனர்.



சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு- 2011 (3ஆம் நாள் அமர்வு)


நான்கு நாட்களாகக் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் கோலாகலமாக நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் 3ஆம் நாள் (08/09.01.2011) அமர்வு பற்றிய விபரங்கள் வருமாறு:


வரதர் அரங்கு

'சிற்றிதழ்'

சுப்பிரமணி மாலதி மண்டபத்தில் இடம்பெற்ற இந்த அமர்வுக்கு இணைத்தலைவர்களாக திரு. சொர்ணபாரதி (இந்தியா- பொதுச் செயலாளர் உலக தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம்), திரு. இரா. நாகலிங்கம் (அன்புமணி- மூத்த எழுத்தாளர்) ஆகியோரும், இணைப்பாளராக செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணனும் (ஆசிரியர் -'செங்கதிர்') பணியாற்றினர். இந்த அமர்வில் திரு. டொமினிக் ஜீவா (ஆசிரியர் - மல்லிகை), திரு. எஸ். பி. கனகசபாபதி (கல்கிதாசன் - கனடா) ஆகியோர் ஆய்வு மதிப்பீட்டாளர்களாகச் செயலாற்றினர்.

உங்கள் வலைப்பதிவில் vathilaipraba.blogspot.com இணைய இதழுக்கு இணைப்பு செய்திட கீழ்காணும் Script -ஐ Copy செய்து உங்கள் வலைப்பதிவுக்கான Script - ல் தேவையான இடத்தில் Paste செய்தால் போதும்....
<a href="http://www.vathilaipraba.blogspot.com" title="Create animated gif"><img src="http://www.loogix.com/img/res/1/3/0/7/2/4/13072420601084675.gif" alt="Create animated gif"/></a><br/><a href="http://www.vathilaipraba.blogspot.com/"></a>

எமது வலை தளத்தில் இணைப்பு செய்துவரும் வலைப் பதிவர்களுக்கு நன்றி..