skip to main | skip to sidebar
  • Home
  • குறிப்புகள்
  • கண்டதும், கேட்டதும்
  • கவிதைகள்
  • நூல் அறிமுகம்
  • படிவம்
  • முகவரிகள்
  • ஹைக்கூ
  • சிறுகதைகள்
  • பொது
வதிலைபிரபா


செய்திகள்

Loading...







இலங்கையில் வரலாற்றுப்பதிவை ஏற்படுத்திய உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தின் 6 ஆவது மாநாடு

Tuesday, 25 January 2011 10:38

     உலகத் தமிழ்ச் சிற்றிதழ் சங்கத்தின் ஆறாவது மாநாடு 05012011 அன்று கொழும்பு ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் கருத்தரங்கு மண்டபத்தில் உலகத் தமிழ்ச் சிற்றிதழ் சங்கத்தின் தலைவரும் 'மகாகவி' சிற்றிதழின் ஆசிரியரு மாகிய வதிலைபிரபாவின் தலைமையில் நடைபெற்றது.இந்த மாநாட்டுக்கு இந்தியாவிலிருந்து 40 பேராளர்களும் சிற்றிதழ் ஆசிரியர்களும் நம்நாட்டு சிற்றிதழ்களின் ஆசிரியர்களும் பேராளர்களும் பெருமளவில் பங்குபற்றிச் சிறப்பித்தனர்.

   ஆரம்ப நிகழ்வு உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தின் இலங்கைக்கிளைத் தலைவர் திருமதி பத்மா சோமகாந்தன் தலைமையில் ஆரம்பமாகியது.தமிழ்த் தொண்டாளர் புரவலர் ஹாசிம் உமரும் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவும் முன்னிலை வகிக்க வரவேற்புரையை உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தின் இலங்கைக் கிளையின் செயலாளர் அந்தனி ஜீவா வழங்கினார். இலங்கையில் கடந்த 46 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவரும் "மல்லிகை' யின் ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் உரை இடம்பெற்றது.சஞ்சிகை வரலாற் றில் தான் கடந்து வந்த கரடுமுரடான பாதையையும் கொடுத்த அர்ப்பணிப்பு களையும் எடுத்துக் கூறினார்.தலைமையுரையைத் தொடர்ந்து மாநாட்டுச் சிறப்பு மலராக வெளிவந்த "செங்கதிர்'வெளியிடப்பட்டது.முதல் பிரதியை புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொண்டார்.தொடர்ந்து சபையிலுள்ளோருக்கு பிரதிகள் வழங்கப்பட்டன.சங்கத்தின் செயற்பாடுகள் பற்றி உலகத் தமிழ் சிற்றிதழ்கள் சங்கத்தின் இலங்கைக்கிளையின் பொருளாளரும் செங்கதிர் ஆசிரியருமாகிய செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன் சிற்றிதழ் சங்கத்தின் செயற்பாடுகளை விளக்கினார்.
     ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து பொதுக்குழு அமர்வு வதிலை பிரபா தலைமையில் ஆரம்பமாகியது."உலகத்தமிழ்ச் சிற்றிதழ் சங்கம் மறைந்த முதுபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணனால்  ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடந்த ஐந்து மாநாடுகளும் இந்தியாவிலேயே நடந்துள்ளன.குற்றாலத்தில் நடைபெற்ற ஐந்தாவது மாநாட்டில் எடுத்த தீர்மானத்தின்படி ஆறாவது மாநாட்டை இன்று இலங்கை,கொழும்பிலே நடத்துகிறோம்.இந்த மாநாட்டு அமைப்பாளராகச் செயற்பட்ட அந்தனி ஜீவாவுக்கு எமது பாராட்டுகளைத் தெரி வித்துக் கொள்கிறோம்' என்று வதிலைபிரபா தலைமையுரையில் தெரிவித் தார்.பொதுச் செயலாளர் சொர்ணபாரதி ஆண்டறிக்கையைச் சமர்ப்பித்து உரையாற்றினார்.தொடர்ந்து இந்தியாவிலிருந்து வருகைதந்திருந்த பேராளர் களுக்கு இரண்டு நிமிடம் தங்களை அறிமுகப்படுத்தச் சந்தர்ப்பம் வழங்கப் பட்டது.அதன்படி பதினெட்டுப் பேராளர்கள் தங்களை அறிமுகம் செய்து சிற்றுரை ஆற்றினர்.அவர்களின் உரைகளிலிருந்து பல தகவல்களைப் பெறக் கூடியதாக இருந்தது.அதைத் தொடர்ந்து அடுத்த மாநாட்டை எங்கு நடத்துவது என்று சபையோரின் கருத்துகளைக் கேட்டறிந்து ஏழாவது உலகத்தமிழ் சிற்றிதழ் சங்கத்தின் மாநாட்டை திருச்சியில் நடத்துவதெனத் தீர்மானிக்கப் பட்டு அச்செய்தி சபையில் அறிவிக்கப்பட்டது.நன்றியுரையை ஜீவநதி ஆசிரி யர் கலாமணி பரணிதரன் வழங்கினார்.
     தொடர்ந்து சிற்றிதழ்கள் குறித்து கலந்துரையாடல் ஜின்னாஹ் சரிபுதீன் தலைமையில் இடம்பெற்றது. ஜீவநதி, செங்கதிர், படிகள், தென்றல், கதிரவ ன், நீங்களும் எழுதலாம்,கவிஞன்,தொண்டன்,சுவைத்திரள் ஆகிய சிற்றிதழ் களின் ஆசிரியர்குழுவைச் சார்ந்தவர்கள் தத்தமது கருத்துகளைச் சுருக்கமாகத் தெரிவித்தனர்.
     உணவு இடைவேளையின் பின் பேராசிரியர் சபா ஜெயராசாவின் தலைமை யில் பாராட்டும் கௌரவிப்பும் நடைபெற்றது.தலைவர் தமது உரையில் எந்த மொழியில் சிற்றிதழ்கள் தோன்றினாலும் அந்தச் சிற்றிதழ்களுக்கு மதிப்புண்டு. ஒவ்வொரு ஆணின் வளர்ச்சிக்குப் பின்புலத்தில் ஒரு பெண் இருப்பாள் .அதேபோல ஒவ்வொரு பெண்ணின் முன்னேற்றத்துக்குப் பின்னால் ஒவ் வொரு ஆண் இருப்பான் என்று சொல்லுவார்கள்.ஒரு எழுத்தாளனுக்குப் பின் னால் சிற்றிதழ்கள் இருக்கும். சிற்றிதழ்கள் மூலம்தான் எழுத்தாளன் முன்னி லைப்படுத்தப்படுகிறான்.
     உலக வரலாற்றில் சிற்றிதழ்கள் இரு வகையாகத் தோற்றம் பெற் றன.அவை தருக்க நிலை சிற்றிதழ்கள்,வர்த்தக இதழ்கள் என்று வெளிவர லாயின.வர்த்தக இதழ்களைப் பொறுத்தளவில் அதன் பண்புகள் வேறு.பொதுக் கருத்துகளை வழங்குவனவாக அவை அமைந்தன.சிற்றிதழ்கள் சிறப்பான இலக்கியப் பணியை முன்னெடுத்தன.வர்ததகச் சஞ்சிகைகள் கருத்தியல் உள்ளடக்கத்திலும்,அமைப்பிலும் வேறுபட்டன.வாண்மைச் சிற்றிதழ்கள் ஆய்வு நிலையில் வெளியிடப்படும் தரம்,பண்புச் சிறப்பு, ஆய்வுமுறை, அணு குமுறை என்ற வகையில் அங்கீகரிக்கப்பட்டனவாக அமைந்துள்ளன. இவை பல்வகைக் கருத்தியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.விற்பனை நிலை க்கு மாறாக இலட்சியங்களை நோக்கி, தரத்தை நோக்கி இலக்கியங்கள் முன் னெடுக்கப் பட்டன.இலக்கியச் சிற்றிதழ்களுக்கும்,வர்த்தக இதழ்களுக்கும் வித் தியாசம் இருக்கின்றது.
     பழைய சிற்றிதழ்கள்,புதிய சிற்றிதழ்கள் ஆசிரியர்கள் பலர் வெளிவந்து கொண்டிருக்கின்றார்கள்.பழையவர்களிடமிருந்து அனுபவத்தைப் பெற வேண் டும். இரண்டு அமைப்பும் ஒன்றிணைந்து அமைப்பு வடிவில் செயற்படின் நமது சிற்றிதழ்கள் ஒவ்வொன்றும் பாராட்டுக்குள்ளாகும்.ஜப்பான் நாட்டில் இருக் கின்ற நிலைபோல் இருக்கின்ற நிலையை மேம்படுத்திச் செல்லல் அது எல்லாவற்றுக்கும் அவசியம்.அபிவிருத்தி,முன்னேற்றம்,மேம்பாடு என்பவற்றை முன்னெடுத்துச் செல்லவேண்டும்.தரத்தில் எவ்வாறு உயர்ந்து நிற்கின்றது,தொடர்ந்து முன்னேறிச் செல்லும்போது என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது போன்ற கணிப்பை ஆசிரியர் கவனத்தில் கொள்ளல் வேண் டும்.பண்பைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும்போது உலகத்தரத்தில் எங்கே நிற்கின்றோம் என்பதைக் கவனித்துக்கொள்ள வேண்டிய தேவை சிற்றிதழ்களுக்கு முக்கியம். கருத்து நிலைப்பாடுகள், அழகியல், விமர்சனம், புதியகோட்பாடு,கருத்துக்கண்ணோட்டம் என்பவற்றைத் தமிழில் முன்னெடுத் து வருகின்றனர்.பின்காலனித்துவம்,பின்நவீனத்துவம்,மார்க்சியம் போன்ற கோட்பாடுகள் கருத்தியலில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன.இனக் குழுமையில் என்னும் கோட்பாடு அடையாள நெருக்குதலைத் தோற்று விக்கும்.உலகமயமாக்கலின் விளிம்பில் நிற்பவர்கள் சிந்தித்து முழு நிறைவான அறிவுக் காட்சியைப் பெறலாம் என்பதைக் குறிப்பிடலாம் என்று தலைமையுரையில் தெரிவித்தார்.
     இவரது உரையைத் தொடர்ந்து பிரபல நாவலாசிரியர் சின்னப்பாரதி உரை நிகழ்த்தினார். நீண்ட காலமாக என்னைத் தெரிந்த அந்தனி ஜீவா உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க மாநாட்டுக்கு வரும் படி அழைத்திருந்தார்.நான் வந்திறங்கியதும் எனது நாவல் ஒன்றின் சிங்கள மொழிபெயர்ப்பு நூலைக் கொண்டுவந்து தந்தார்கள்.வேற்று மொழிகளில் எனது படைப்புகள் வெளி வருவது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் நிகழ்வாகும்.இன்று இந்த மாநாட்டுக்கு வந்த பிற்பாடு தான் எனக்கு விருது வழங்க இருப்பது தெரிய வந்தது.நான் மார்க்சிய சிந்தனையாளன்.எனக்கு விருதுகள் பெறுவதில் உடன்பாடு இல்லை.அதை நான் விரும்புபவனுமல்ல.
     ஏங்கலஸுக்கு அறுபது வயது நிரம்பியபோது இளைஞர் இசைக்குழு அவருக்குப் பாராட்டு வழங்க எண்ணி அவரிடம் போய் அந்த வேண்டுகோளை விடுத்தபோது "மார்க்ஸும் நானும் இறக்கும் வரை எந்தவித பாராட்டு களையும் பெறுவதில்லை என்று தீர்மானித்திருக்கிறோம்'. ஏ.எஸ்.நம்பூதிபாட் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தவர்.எனவே அரச பரிசு களை ஏற்க மறுத்துவிட்டார்.என்னை முன்னிலைப்படுத்தி வழிநடத்திச் சென்ற ஏ.கே.கண்ணன் "பட்டம், பதவி, விளம்பரம், பொருள் என்பவற்றுக்கு ஆசைப் படாதே உன் எழுத்தில் உண்மை இருக்கும், நேர்மை இருக்கும் என்றதனால் நீண்ட பரிசுகள் தேவையில்லை'என்று சொல்லியுள்ளார். ஆகவே அவர்கள் வழியில் வந்த நானும் பரிசுகள் பெறுவதைத் தவிர்த்து வருகின்றேன்.
     பிரபல எழுத்தாளர்களாகிய புஸ்கின்,சேக்கோ போன்றோர்களின் எழுத்துத் துறையிலிருந்து பிறப்பை எடுத்தேன்.195253 இல் வெளிவந்த "மனோ ரஞ்சிதம்',"சரஸ்வதி' ஆகியவற்றில் எழுதினேன்.நானும் சிற்றிதழ்களில் எழுதி த்தான் இன்று சிறந்த எழுத்தாளனாக வந்துள்ளேன்.படைப்பின் காத்திரம்தான் எனக்கு மனமகிழ்ச்சியைத் தருகின்றது.நான் மார்க்ஸிஸ்ட் வாழ்க்கையின் போராளியாக நின்று எழுதுபவன் என்று பிரபல எழுத்தாளர் பொன்னீலன் கூறி யுள்ளார்.ஒருவரின் சாதனைகளுக்கு அர்ப்பணிப்புகளும் சரித்திர நிகழ்வுகளும் உலகவரலாற்றில் முக்கியமாகப் பேணப்பட வேண்டும் என்று கூறினார்.
     இதைத் தொடர்ந்து விருதுகள் வழங்கப்பட்டன.பாரதி இலக்கிய விருது நாவலாசிரியர் கு.சின்னப்பாரதிக்கும் வல்லிக்கண்ணன் இதழியல் விருது மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவுக்கும் அவ்வை இலக்கிய விருது பத்மா சோமகாந்தனுக்கும் விழாத் தலைவரால் வழங்கப்பட்டது. மேலும்,செங்கதிர் இலக்கிய விருது க.பட்டாபிராமனுக்குக் கொடுக்கப்பட்டது.அத்துடன் நீங்களும் எழுதலாம் அவைத்திரன் படிகள் காந்தியம்,தென்றல், சிராங்கூன் ரைம்ஸ், செங்கரும்பு, குறளருவி ஆகிய சிற்றிதழ்களின் ஆசிரியர்களுக்கும் விருது களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பல புதிய முகங்களைச் சந்திக்கும் வாய்ப்பு இம்மாநாட்டால் கிடைத்தது.பல எதிர்பார்ப்புகளுடன் நடைபெற்ற உலகத்தமிழ் சிற்றிதழ்கள் சங்க ஆறாவது மாநாடு நிறைவு பெற்றது. நிகழ்ச்சி அமைப்பாளராக கே.பொன்னுத்துரை செயலாற்றினார்.
- நன்றி. தினக்குரல் நாளிதழ், இலங்கை.
Posted by Unknown
Email This BlogThis! Share to X Share to Facebook

0 comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)
உங்கள் வலைப்பதிவில் vathilaipraba.blogspot.com இணைய இதழுக்கு இணைப்பு செய்திட கீழ்காணும் Script -ஐ Copy செய்து உங்கள் வலைப்பதிவுக்கான Script - ல் தேவையான இடத்தில் Paste செய்தால் போதும்....
<a href="http://www.vathilaipraba.blogspot.com" title="Create animated gif"><img src="http://www.loogix.com/img/res/1/3/0/7/2/4/13072420601084675.gif" alt="Create animated gif"/></a><br/><a href="http://www.vathilaipraba.blogspot.com/"></a>

எமது வலை தளத்தில் இணைப்பு செய்துவரும் வலைப் பதிவர்களுக்கு நன்றி..

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Vathilai Praba

  • தமிழ்முரசு Tamil Murasu
  • யவ்வனம்
  • SARVADESA TAMILER CENTER
  • காற்றுவெளி இதழ்
  • தி.க.சி
  • ஓவியா பதிப்பகம்
  • நெய்தல்
  • Muthukamalam.com
  • திரட்டி.காம் பதிவுகள்
  • தமிழ்ப் புத்தகம்
வதிலைபிரபா

உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க 6 -ஆவது மாநாடு - இலங்கை

இலங்கை சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு

Unknown
View my complete profile

Search Box



Highlight 3 'மகாகவி' இதழ்களை முழுமையாக வாசிக்க படத்தின் மீது 'click' செய்யுங்கள்.

Blogger Tips and Tricks
Highlight 2

Posts
Atom
Posts
Comments
Atom
Comments
Literature Blogs
Powered by Blogger.

Recent Comments

© வதிலைபிரபா - Designed by Theme.fm, Google blogs templates by Blog and Web.