பிரித்தானிய, ஈழத்து எழுத்தாளர் கவிஞர். முல்லை அமுதன் பிரித்தானியாவில் ஈழத்து நூல்களின் கண்காட்சிகளை நடாத்துவதில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார்.
கவிஞர். முல்லை அமுதன்அவர்களின் இயற்பெயர் இரத்தினசபாபதி. மகேந்திரன். இலங்கை, யாழ்ப்பாணம், கல்வியங்காடு இவரது பிறப்பிடம்..புலம் பெயர்ந்து பிரித்தானியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் முல்லை அமுதன் பிரித்தானிய, ஈழத்து எழுத்தாளர் ஆவார். பிரித்தானியாவில் ஈழத்து நூல்களின் கண்காட்சிகளை நடாத்துவதில் முழுக்கவனம் செலுத்தி வரும் இவர் 'காற்றுவெளி' என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.'காற்றுவெளி' அச்சு இதழாக வந்து, தற்போது இணைய இதழாக வெளிவருகிறது. முல்லை அமுதன் 1980 களில் எழுதத் தொடங்கினார். 1981இல் இவரது முதல் நூலான 'நித்திய கல்யாணி' கவிதை நூல் வெளியானது. இது வரை 12 நூல்கள் வெளியிட்டுள்ளார். ஈழத்து நூல்களை சேகரிப்பதுடன், தொடர்ச்சியாக நூல்கண்காட்சிகளை நடாத்தி, அவற்றை ஆவணப்படுத்தி வரும் இவரால் 10,000 க்கும் அதிகமான நூல்கள், சஞ்சிகைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் மறைந்த எழுத்தாளர்களின் புகைப்படங்களையும், நினைவுமலர்களையும் சேகரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இவரது நூல் கண்காட்சி பற்றி 'பதிவுகள்' இணைய தளத்தில்..
இவரது நூல் கண்காட்சி பற்றி 'பதிவுகள்' இணைய தளத்தில்..

லண்டன் போன்ற தலைநகரில் இத்தகைய ஒரு பிரமிப்பூட்டும் ஈழத்து நூல்களின் கண்காட்சி இடம்பெறுவது எமக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும்;. அறிவியல், சமயம், வரலாறு, சிறுகதை, கவிதை, நாவல், சமையல், சிறுவர் இலக்கியம்,
விமர்சனம், கட்டுரைகள் ஆகிய பல்வேறு தலைப்புக்களின் கீழ் இலங்கையில் வெளியாகியுள்ள பெருவாரியான நூல்களை பார்க்கும்போது மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் பரவி இருந்ததை உணரமுடிந்தது.
இவ்வளவு பெருந்தொகையான நூல்களை இலங்கையில் இருந்து எழுத்தாளர்களிடமிருந்தும், பதிப்பாளர்களிடமிருந்தம் லண்டனுக்குத் தருவிக்க முல்லை அமுதன் பெரும் கஷ்டங்களை அனுபவித்திருப்பார் என்பதை வலியுறுத்திச் சொல்ல வேண்டியதில்லை. இதனைவிட சைமன் காசிச் செட்டியில் இருந்து டானியல் அன்ரனிவரை மிக அரிதாகவே கிடைக்கக்கூடிய ஈழத்து அறிஞர்கள், எழுத்தாளர்களின் புகைப்படங்களையும் கண்காட்சிக்கு வைத்திருந்தமை இந்த கண்காட்சிக்கு புதிய மெருகு சேர்த்தது எனலாம். காற்று வெளி சஞ்சிகையின் ஆதரவில் இடம்பெற்ற இந்தக் கண்காட்சி முடிவில் நடன நிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
நித்திய கல்யாணி (1981)
புதிய அடிமைகள் (1983)
விடியத்துடிக்கும் ராத்திரிகள் (1984)
யுத்தகாண்டம் (1989)
விழுதுகள் மண்ணைத் தொடும் (1993)
ஆத்மா (1994)
விமோசனம் நாளை (1995)
ஸ்நேகம் (1998)
பட்டங்கள் சுமக்கிறான் (1999)
முடிந்த கதை தொடர்வதில்லை (1999)
யாகம் (2000)
இசைக்குள் அடங்காத பாடல்கள் (2002)
பதிப்பித்த நூல்கள் : இலக்கியப்பூக்கள் (2008)
ஓவியா பதிப்பகம் வெளியீடான 'சுதந்திரன் கவிதைகள்' நூல் வெளிவரக் காரணமானவர்.
- நன்றி.
தமிழ் விக்கிபீடியா
பதிவுகள்.காம்